இந்தியா

தொடர்ந்து 23 ஆண்டு பதவி வகிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமித் ஷா வாழ்த்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளத்தில் நேற்று கூறியிருப்பதாவது: முதல்வர், பிரதமர் என பொது வாழ்க்கையில் 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் நரேந்திர மோடி. நாட்டின் நலனுக்காகவும், பொதுச் சேவைக்காகவும் ஒருவர் தனது வாழ்நாள் முழுவதையும் எப்படி அர்ப்பணிக்கலாம் என்பதற்கு இந்த சாதனை முன்னுதாரணமாக விளங்குகிறது.

குறிப்பாக, சமூக வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மோடியின் இந்த 23 ஆண்டுகால பயணம் ஒருவாழும் உத்வேகமாக விளங்குகிறது. மோடியின் இந்தப் பயணத்தை பார்ப்பதற்கான நல்வாய்ப்பு எனக்கு கிடைத்திருப் பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழைகளின் நலன் மற்றும் வளர்ச்சி,நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய அடையாளத்தை வலுப்படுத்துவது ஆகியவற்றில் எவ்வாறு ஒரே நேரத்தில் கவனம் செலுத்த முடியும் என்பதை மோடிசெய்துகாட்டி உள்ளார். பிரச்சினைகளை துண்டு துண்டாக பார்ப்பதற்கு பதில் அவற்றுக்கான தீர்வுகளை நாட்டின் முன் வைத்துள்ளார்.

ஓய்வின்றி, சோர்வடையாமல், நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் நாட்டை கட்டமைக்கும் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT