இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை சனிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
இஸ்லாமியர்கள், தங்கள் முக்கிய கடமைகளில் ஒன்றான நோன்பை தொடர்ந்து ரமலான் பண்டிகை கொண்டாடுகின்றனர். நாட்டின் சில பகுதிகளில் இந்த பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ரமலானை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ரமலான் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் மக்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்தனர்.
ராமநாதபுரத்தில் நடந்த சிறப்பு தொழுயில் கலந்து கொண்ட சிறுவர்கள் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் காட்சி
காஷ்மீரில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற சிறப்பு தொழுகை
டெல்லியிலுள்ள பாராளுமன்ற சாலையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் முகமத் ஹமித் அன்சாரி, காங்கிரஸ்ஸின் குலாம் நபி ஆசாத், மற்றும் பாஜக முன்னாள் அமைச்சர் ஷானவாஸ் ஹுசைன்.