இந்தியா

இலங்கைத் தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்படும்: சுஷ்மா சுவராஜ்

செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுசெய்து இலங்கை அரசு வலைதளத்தில் கட்டுரை வெளியான விவகாரம் குறித்து இலங்கை தூதரை நேரில் அழைத்து விளக்கம் கேட்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் அவர் கூறும்போது, "இந்திய அரசு இலங்கையின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கைத் தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்படும்" என்றார் சுஷ்மா சுவராஜ்

மக்களவையில் இன்று அதிமுக எம்.பி.க்கள் இந்த விவகாரம் குறித்து அமளியில் ஈடுபட்டதையடுத்து, அவை நடவடிக்கைகள் இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக மீனவர்கள் பிரச்சனைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதங்களை இழிவுபடுத்தும் விதமாக இலங்கை அரசு வலைதளம் கட்டுரை வெளியிட்டதையடுத்து கடும் கண்டனக்குரல்கள் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT