இந்தியா

கடந்த 10 ஆண்டுகளில் விசாரணை நீதிமன்றங்களில் 1,310 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘இந்​தி​யா​வில் மரண தண்​டனை: ஆண்டு புள்​ளி​விவர அறிக்கை - 2025’ கடந்த 4-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது. இந்த அறிக்​கையை ஹைத​ரா​பாத்​தில் உள்ள தேசிய சட்ட ஆய்​வு​கள் மற்​றும் ஆராய்ச்சி அகாட​மி​யின் சட்​டப் பல்​கலைக்​கழகத்​தின், ‘தி ஸ்கொயர் சர்க்​கிள் கிளினிக்’ குற்​ற​வியல் நீதி பிரிவு ஆய்வு செய்து வெளி​யிட்ட தகவலில் கூறி​யிருப்​ப​தாவது:

கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை​யில் விசா​ரணை நீதி​மன்​றங்​கள் 1,310 பேருக்கு மரண தண்​டனை விதித்​துள்​ளன. அவற்​றில் 106 பேருக்கு மட்​டும் மரண தண்​டனையை உயர் நீதி​மன்​றம் உறுதி செய்​துள்​ளது. இதன் மூலம் விசா​ரணை நீதி​மன்​றங்​கள் அளிக்​கும் தண்​டனை​களுக்​கும் உயர் நீதி​மன்​றங்​களில் வெளிவரும் தீர்ப்​பு​களுக்​கும் நிலை​யான இடைவெளி இருப்​பதை காண முடிகிறது.

          

கடந்த ஆண்டு டிசம்​பர் 31-ம் தேதி நில​வரப்​படி சிறை கைதி​கள் 574 பேர் மரண தண்​டனை விதிக்​கப்​பட்​ட​வர்​களாக இருந்​தனர். இது கடந்த 2016-ம் ஆண்டு முதல் அதி​கபட்​ச​மாகும். அதன்​படி கடந்த 2025-ம் ஆண்டு மட்​டும் 94 வழக்​கு​களில் 128 மரண தண்​டனை​களை செஷன்ஸ் நீதி​மன்​றம் வழங்​கி​யுள்​ளது. அவற்​றில் பெரும்​பாலான மரண தண்​டனை​களை உயர் நீதி​மன்​றங்​கள் குறைத்​துள்​ளன, அல்​லது விடு​வித்​துள்​ளன. இதே நிலை​தான் உச்ச நீதி​மன்​றத்​தி​லும் காணப்​படு​கிறது.

உயர் நீதி​மன்​றங்​களில் மரண தண்​டனை உறுதி செய்​யப்​பட்​டிருந்​தா​லும், கடந்த 2023-ம் ஆண்​டில் இருந்து 2025-ம் ஆண்டு வரை​யில் உச்ச நீதி​மன்​றம் ஒரு​வருக்​குக் கூட மரண தண்டனையை உறு​திப்​படுத்​த​வில்​லை.

விசா​ரணை நீதி​மன்​றங்​களில் அதி​கபட்​ச​மாக மரண தண்​டனை விதிக்​கப்​பட்​டு, உயர் நீதி​மன்​றங்​கள், உச்ச நீதி​மன்​றத்​தில் மாற்றி தீர்ப்​பளிக்​கும் போது, மரண தண்​டனை வழங்​கு​வதன் நம்​பகத்​தன்மை குறித்து கேள்வி எழுகிறது. அதே​நேரத்​தில் மரண தண்​டனை​யில் இருந்து விடுவிக்​கப்​படு​பவர்​களின் எண்​ணிக்கை அதி​க​மாக இருப்​பது குற்​ற​வியல் நீதி​முறை​யின் குறை​களை எடுத்​துக் காட்​டு​கிறது. இது விசா​ரணை​யின் தோல்​வியை எடுத்​துக்​காட்​டு​கிறது. இந்த தவறுகளால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களும், குற்​ற​வாளி​களும் கூட பா​திக்​கப்​படு​கின்​றனர். அவர்​களின், வாழ்வாதாரம் பாதிக்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT