கொல்கத்தா உயர்நீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதியாக மஞ்சுளா செல்லூர் புதன்கிழமை பதவியேற்றார்.
மேற்கு வங்க ஆளுநர் கே.என். திரிபாதி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பதவியேற்றுப் பேசிய மஞ்சுளா, “கொல்கத்தா மிகப்பெரிய பாரம்பரியம் மிக்க நகரம். ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களை நாட்டுக்கு தந்தது மேற்கு வங்கம்’’ என்று குறிப்பிட்டார்.
கொல்கத்தா உயர் நீதிமன்றம் பழமை வாய்ந்ததும், 152 ஆண்டு பாரம்பரியம் கொண்டதுமாகும்.