போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தினர். இந்திய ராணு வமும் இதற்கு பதிலடி கொடுத்தது.
இது தொடர்பாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் லெப்டிணன்ட் கர்னல் மணீஸ் மஹதா கூறியது:
பூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப் பாட்டுப் பகுதியில் செவ்வாய்க் கிழமை காலை 11.30 மணியளவில் இந்திய நிலைகளை நோக்கி சிறிய ரக ராக்கெட் குண்டுகளை வீசியும் தானியங்கி துப்பாக்கிகள் மூலமும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்த தொடங்கினர்.
இதையடுத்து இந்தியத் தரப்பில் இருந்தும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. நமது தரப்பில் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.
தீவிரவாதிகள் இந்தியாவுக்கு ஊடுருவுவதற்கு வசதியாக எல்லை யில் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை நடத்து வதை வழக்கமாக கொண்டுள்ளது. எனினும் இந்திய ராணுவத்தினர் இதனை முறியடித்து வருகின்றனர்.
ஜூலையில் 8 முறையும், ஜூன் மாதத்தில் 5 முறையும், ஏப்ரல், மே மாதங்களில் 19 முறையும் பாகிஸ் தான் ராணுவத்தினர் காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.