ஓடும் ரயிலில் தீ பரவியதாக வதந்தி பரவியதால், 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பீதியடைந்து கீழே குதித்ததில் காயமடைந்தனர்.
ரயில், பஸ்களில் தீ விபத்து ஏற்படுவது சமீப காலங்களில் தொடர்கிறது. வெளியூர் பயணம் என்றாலே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. இந்நிலையில் திங்கள் கிழமை காலை நிஜாமாபாத் - காச்சிகூடா எக்ஸ்பிரஸ் ரயில் ஹைதராபாத் அருகே குண்டல போச்சம்பள்ளி என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது, ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி கிளம்பியது.
இதனால் பீதியடைந்த பயணி கள், ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதில் ரயில் நிற்பதற்குள் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் இருந்து கீழே குதித்தனர். இதனால் இவர்கள் காயமடைந்தனர்.
பின்னர், ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, காய மடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.