இந்தியா

பிளாஸ்டிக் கழிவுகளில் சாலைகள் அமைக்க மத்திய அரசு அறிவுரை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அரசின் செயலர்கள், வினிமகாஜன், அனுராஜ் ஜெயின், சைலேஷ் குமார் சிங் ஆகியோர் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கும் ஜூன் 28-ம் தேதிஎழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

நகரங்களுக்குள் அமைக்கப்படும் சாலைகளில் பிட்டுமன்எடையில் 8 சதவீதம் வரை பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்துமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

அதன்படி, வீட்டு காலனிகள், அலுவலக வளாகங்களின் உள் சாலைகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பிட்டுமன் சாலைகள் அமைக்கப்படும்போது அதில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செயலர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT