திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கலைக்கப்பட்டதை தொடர்ந்து, சிறப்பு அதிகாரிகள் குழுவை ஆந்திர அரசு நியமித் துள்ளது.
திருமலை-திருப்பதி தேவஸ் தான அறங்காவலர் குழு உட்பட மாநிலத்தில் உள்ள அனைத்து தேவஸ்தான அறங்காவலர் குழுக்களையும் ஆந்திர அரசு இம்மாதம் 9-ம் தேதி ரத்து செய்தது.
மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து இக்குழுக்கள் கலைக்கப்பட்டன. இதையடுத்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு புதிய தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. ஆளும் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொழிலதிபர்கள், திரைப்பட உலகினர் என பலர் இப்பதவிக்கு போட்டியிட்டனர்.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான சிறப்பு அதிகாரிகள் குழுவை மாநில அரசு நியமித்துள்ளது. இக்குழுவின் தலைவராக, மாநில இந்து சமய அறநிலைத் துறை முதன்மை செயலாளர் ஷர்மாவும், உறுப்பினர்களாக எம்.ஜி. கோபால் (தற்போதைய தேவஸ் தான தலைமை நிர்வாகி), இந்து சமய அறநிலைத்துறை மாநில ஆணையாளர் அனுராதா ஆகியோரும் நியமிக்கப் பட்டுள்ளனர்.