இந்தியா

மணிப்பூரில் சட்டவிரோத குடியேறிகள்: 5 ஆண்டுகளில் 10,675 பேரை கண்டறிந்த அரசு

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: மணிப்பூர் சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் சுர்ஜாகுமார் ஒக்ராம் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பிரேன் சிங் அளித்த பதில் வருமாறு: மணிப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் 10,675 சட்டவிரோத குடியேறிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்கள் மியான்மர், சீனா, வங்கதேசம், நார்வே மற்றும் நேபாளத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் 85 பேர், 5 ஆண்டுகளில் நாடு கடத்தப்பட்டுள்ளனர். தற்போது மணிப்பூரில் உள்ள சட்டவிரோத குடியேறிகளில் 143 பேர் தடுப்புக் காவல் மையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தற்காலிக குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக மாநில அரசு இதுவரை ரூ.85 லட்சத்துக்கு மேல் செலவிட்டுள்ளது. இவ்வாறு பிரேன் சிங் கூறினார்.

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் இனக்கலவரம் வெடித்ததில் இருந்து சட்டவிரோத குடியேற்றம் குறித்த கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT