இந்தியா

கேரள முதல்வருக்கு எதிராக சமூக ஊடகப் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அனைவரும் நிதியுதவி அளிக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் முகநூலில் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என எக்ஸ் சமூக வலைதளத்தில் ‘கோயிகோடன்ஸ் 2.0’ என்ற முகவரியில் இருந்து பிரச்சாரம் செய்யப்பட்டது. இது தொடர்பாக மாநில காவல் துறை ஊடகப் பிரிவு நேற்று கூறுகையில், “இந்தப் பிரச்சாரம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தடுக்கும் நோக்கம் கொண்டது. இதுகுறித்து பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வயநாடு சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்” என்று தெரிவித்தது.

SCROLL FOR NEXT