இந்தியா

கன்வர் யாத்திரையில் மின்சாரம் தாக்கி 5 பக்தர்கள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ராஞ்சி: வடமாநிலங்களில் சிவ பக்தர்கள், கன்வர் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்தசூழலில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் லதேகர் மாவட்டம், டாம்டாம் டோலா பகுதியில் கன்வர் யாத்திரை பக்தர்கள் சென்ற சரக்கு வேன், நேற்று அதிகாலை சாலையோர மின் கம்பத்தில் மோதியது.

இதில் வாகனத்தில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “ஜார்க்கண்ட்டின் தேவ்கர் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு 19 பேர் சரக்கு வாகனத்தில் புனித யாத்திரை சென்று உள்ளனர். சுவாமியை வழிபட்ட பிறகு வாகனத்தில் அவர்கள் வீடு திரும்பி கொண்டிருந்தபோது 11,000 வால்ட் மின்சார கம்பத்தின் மீது மோதி உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது" என்றனர்.

SCROLL FOR NEXT