இந்தியா

மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் சித்தராமையாவுக்கு ஆளுநர் நோட்டீஸ்

இரா.வினோத்

பெங்களூரு: க‌ர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக மைசூருவில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கியது. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை எழுந்தது.

இந்த விவகாரத்தில் சித்தராமையா விதிமுறையை மீறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக, ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக தெரிவித்துள்ளது. எனவே சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், சிபிஐவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தொடர் போராட்டங்களில் பாஜக ஈடுபட்டுள்ளது.

இந்த விவகாரத்தால் முதல்வர் சித்தராமையாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவை டெல்லி வரவழைத்து விளக்கம் கேட்டது.

அதன் தொடர்ச்சியாக, கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நேற்று சித்தராமையாவுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,“சமூக ஆர்வலர் டி.ஜே.ஆப்ரஹாம் அளித்த புகார் மனுவில், மைசூரு நகர மேம்பாட்டு கழகத்தின் வீட்டு மனை ஒதுக்கிய விவகாரத்தில் சட்டவிரோத முறைகேடுநடந்துள்ளது. முதல்வர் சித்தராமையா தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கியுள்ளார்.

இதுகுறித்து விசாரித்து உரியசட்ட‌ நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதிஅளிக்க வேண்டும் என கேட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாகஎனக்கு எழுத்துப்பூர்வ‌மாக விளக்கம் அளிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT