அமராவதி: விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அரிசி, பருப்பு விலையை2-வது முறையாக சந்திரபாபு நாயுடு அரசு நேற்று குறைத்தது.
ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது கடந்த 11-ம் தேதிரூ.160 ஆகவும், ரூ.55.85 விற்றுவந்தபுழுங்கல் அரிசி ரூ.49-க்கும், பச்சரிசிரூ. 52.40-லிருந்து ரூ.48-க்கும் உழவர் சந்தைகள் மூலம் மக்களுக்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆந்திர மாநில சமூக நலத்துறை அமைச்சர் நாதெள்ள மனோகர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ரூ. 160-க்கு விற்கப்படும் துவரம் பருப்பு வியாழக்கிழமை (இன்று) முதல் ஆந்திர மாநிலத்தில் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படும். ரூ.49-க்குவிற்பனை செய்யப்பட்டு வரும் சாப்பாட்டு புழுங்கல் அரிசி இனி ஒரு கிலோ ரூ. 47-க்கு விற்பனை செய்யப்படும் என்றார்.