இந்தியா

கேதார்நாத் கோயிலில் 230 கிலோ தங்கம் பயன்படுத்தவில்லை: அறக்கட்டளை தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

கேதார்நாத்: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சார்தாம் எனப்படும் 4 புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று கேதார்நாத் சிவன் கோயில். இதன் கருவறையில் இருந்த 228 கிலோ தங்கம் மாயமாகிவிட்டதாக ஜோதிஷ் பீடத்தின் சங்கராச்சார்யா சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சமீபத்தில் புகார் கூறினார்.

இதுகுறித்து விசாரிக்க மாநில அரசு உயர்நிலைக்குழுவை அமைத்துள்ளது. கார்வால் ஆணை யர் தலைமையிலான இக்குழுவில் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பொற்கொல்லர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஸ்ரீ பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் அறக்கட்டளை குழு தலைவர் அஜேந்திர அஜய் கூறும்போது, “கேதார்நாத் கோயில் கருவறையில் 23 கிலோதங்கம் மற்றும் ஆயிரம் கிலோசெம்பு தகடுகள் பயன்படுத்தப்பட் டுள்ளன என்று தொடக்கம் முதலே நாங்கள் கூறி வருகிறோம். ஆனால் 230 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் எவ்விதஆதாரமும் இல்லாமல் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கேதார்நாத் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, வாக்குகளை கவர்வதற்காக காங்கிரஸ் கட்சியினர் வதந்தி பரப்பி வருகின்றனர். அவர்களுடைய குற்றச்சாட்டு அரசியல் உள்நோக் கம் கொண்டது” என்றார்.

SCROLL FOR NEXT