இந்தியா

சீனா எதிரி நாடு அல்ல: இந்தியாவுக்கு அமெரிக்கா அறிவுரை

செய்திப்பிரிவு

சீனாவை எதிரி நாடாக இந்தியா பார்க்கக்கூடாது என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங் கில் அவர் பேசியதாவது:

உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான் அமெரிக் காவின் விருப்பம். இதற்கான கூட்டு முயற்சியில் சீனாவும் ஒரு நம்பகமான நாடு. இந்தியாவுடனும் சீனாவுடனும் அமெரிக்கா நல்லுறவைப் பேணி வருகிறது.

சீனாவை எதிரி நாடாக இந்தியா பார்க்கக்கூடாது. இரு நாடுகள் இடையேயும் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும்.

தெற்கு சீனக் கடலில் நிலவும் எல்லைப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்பட வேண்டும் என்றே அமெரிக்காவும் இந்தியாவும் விரும்புகின்றன. அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் இடையே முத்தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஏற்படுத்தப்படும். 3 நாடுகளும் இணைந்து அண்மையில் பசிபிக் கடல் பகுதியில் கூட்டு போர் ஒத்திகையில் ஈடுபட்டன.

உலகளாவிய அளவில் இந்தியா சக்திமிக்க நாடாக உருவெடுக்க அமெரிக்கா உதவி செய்யும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது என அவர் பேசினார்.

SCROLL FOR NEXT