புதுடெல்லி: மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
உச்ச நீதிமன்றத்தில் 84,045 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 60,11,678 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாவட்ட மற்றும் இதர நீதிமன்றங்களில் 4,53,51,913 வழக்குகள் தேங்கி உள்ளன.
ஒட்டுமொத்தமாக நாடு முழு வதும் பல்வேறு நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் தேங்கி உள்ளன. மிக அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தின் கீழமை நீதிமன்றங்களில் 1.18 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நீதிமன்றங்களில் போதிய உள்கட்டமைப்புகள் இல்லாதது, நீதிமன்ற ஊழியர்கள் பற்றாக்குறை, போலீஸார், சாட்சிகள், மனுதாரர்கள், வழக்கறிஞர்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வழக்குகள் தேக்கமடைந்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.