இந்தியா

எதையும் ஏற்கவோ நிராகரிக்கவோ இப்போது தயாராக இல்லை: தேவே கவுடா சூசகம்

செய்திப்பிரிவு

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பலவும் தொங்கு சட்டசபையை சுட்டிக்காட்டியதோடு ஆட்சி அமைப்பதில் ஜனதா தளம் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கூறியுள்ள நிலையில், "எதையும் ஏற்கவோ நிராகரிக்கவோ இப்போது தயாராக இல்லை" என அக்கட்சியின் தலைவர் தேவே கவுடா சூசகமாகத் தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் முடிவுகள் குறித்து தேவே கவுடாவிடன் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தேர்தல் முடிவு வரை காத்திருப்போம். எதையும் ஏற்கவோ நிராகரிக்கவோ இப்போது தயாராக இல்லை. உண்மை என்னவென்று தெரிந்துவிடும்" என்றார்.

நேற்று தேர்தலில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேவே கவுடா, "நாங்கள் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம்" எனக் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT