இந்தியா

பஞ்சாப் முதல்வர் மீது ஷூ வீச்சு: வேலையில்லா பட்டதாரி ஆத்திரம்

செய்திப்பிரிவு

பஞ்சாப் மாநிலத்தில் இஸ்ரூ கிராமத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மீது வேலையில்லா பட்டதாரி இளைஞர் ஒருவர் தனது காலணியை வீசினார்.

அந்தக் கூட்டத்தின்போது உரையாற்ற எழுந்த பாதல் மீது அந்த ஷூ வீசப்பட்டது. எனினும் அது அவர் மீது படாமல் மேடைக்குச் சற்றுத் தள்ளி விழுந்தது.

ஷூ வீசியவர் பெயர் விக்ரம் (23) என்றும், அவர் பர்னாலா நகரத்தைச் சேர்ந்தவர் என்றும் அறியப்பட்டுள்ளது. ஷூ வீசியதோடு மட்டுமல்லாமல் முதல்வருக்கு எதிராகக் கோஷமும் எழுப்பினார் என்று கூறப்படுகிறது.

விசாரணையின்போது, "நான் முதல்வர் மீது ஷூ வீசவில்லை. அவர் அமர்ந் திருந்த நாற்காலியை நோக்கித் தான் வீசினேன். எல்லா அரசியல் வாதிகள் மீதும் எனக்குக் கோபம் உண்டு. அவர்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கு வதாகக் கூறுகின்றனர். ஆனால் நடைமுறையில் ஒன்றுமே செய்வதில்லை" என்று அவர் கூறினார்.

தன் மீது ஷூ வீசிய அந்த இளைஞரை முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மன்னித்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT