இந்தியா

எல்லையில் கடும் துப்பாக்கி சண்டை: 4 தீவிரவாதிகள், 2 ராணுவ வீரர்கள் பலி - 25 இந்திய நிலைகள், 19 கிராமங்கள் மீது தாக்குதல்

செய்திப்பிரிவு

காஷ்மீர் மாநில எல்லையில் ஞாயிற்றுக் கிழமை இரு வேறு இடங்களில் நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2 இந்திய வீரர்கள் பலியாயினர்.

இதுகுறித்து ஸ்ரீநகரில் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “குப்வாரா மாவட்டம் கலாரூஸ் வனப் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப் புப் படையினருக்கும் இடையே ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை யில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த ராணுவ வீரர் நீரஜ் குமார் ஸ்ரீநகரில் உள்ள பதாமி பாக் கன்டோன்மென்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்தார். இதே மாவட்டத்தில் தங்தார் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே தீவிரவாதிகளுடன் நடைபெற்ற மற்றொரு சண்டையில் ஒரு வீரர் பலியானார்” என்றார்.

இதுகுறித்து டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிஎஸ்எப் இயக்குநர் ஜெனரல் டி.கே.பதக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த சில வாரங்களாக பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தொடர்ந்து தாக்கு தல் நடத்தி வருகிறது. தீவிரவாதிகள் ஊடுருவ உதவும் வகையில் இந்திய வீரர்களின் கவனத்தை திசை திருப்பவே இந்தத் தாக்குதல் நடத்தப்படு கிறது. கடந்த ஆண்டும் இதே காலத்தில் இதே காரணத்துக்காக தாக்குதல் நடத்தப் பட்டது. இவ்வாறு பதக் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு பதிலடி

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜேட்லி செய்தி யாளர்களிடம் கூறும்போது, “ஜம்மு காஷ் மீர் எல்லையில் கடந்த சில நாட்களாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ் தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நமது வீரர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்” என்றார்.

SCROLL FOR NEXT