இந்தியா

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆரஞ்சு அலர்ட்: இன்றும் நாளையும் மும்பையில் கனமழை பெய்யும்

செய்திப்பிரிவு

மும்பை: மும்பையில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளை வெள்ளம் சூழ்ந்து சாலைப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட் டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் புறநகர் ரயில் சேவை, விமானச் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலை சந்திப்புகளில் சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் மகாராஷ்டிர மாநிலத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பையில் இன்றும், நாளையும் (ஜூலை 13, 14) கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மும்பைக்கு மேலே காற்றழுத்தசுழற்சி உருவாகியிருப்பதன் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நகரில் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. ஏற்கனவே, பெய்து வரும் மழை காரணமாக, மும்பையின் கிங்ஸ் சர்க்கிள் பகுதி உட்பட பலபகுதிகள் வெள்ளத்தால் மிதக்கின்றன. நேற்று முன்தினம் இரவு முழுவதும் நவி மும்பையில் பெய்தமழை காரணமாக பல இடங்களில்மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, தானேமற்றும் ராய்காட் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பை அந்தேரி, வொர்லி நாகா பகுதியை நோக்கிச் செல்லும் சாலைகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT