இந்தியா

குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான முடிவுகளை பெண்களே எடுக்க அமைச்சர் நட்டா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ‘தாய்-சேய் நலன் மற்றும் நல்வாழ்வுக்காக ஆரோக்கியமான கர்ப்ப காலமும் இடைவெளியும்' என்ற தலைப்பில் ஆன்லைன் விவாத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா பங்கேற்று பேசியதாவது: மொத்த கருவுறுதல் விகிதம் (டிஎஃப்ஆர்) குறைவாக இருக்கும் மாநிலங்களில் அது தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். இந்த விகிதம் அதிகமாக இருக்கும் மாநிலங்களில் அது குறைக்கப்பட வேண்டும். இதற்காக நாம் பாடுபட வேண்டும்.

நவீன கருத்தடை சாதனங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உள்ளன. இவை பரவலாக பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் வட்டாரங்களில் இவை பரவலாக பயன்படுத்தப்பட வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான முடிவுகளை எடுக்கும் உரிமை பெண்களுக்கு உள்ளது. இந்த உரிமையை நாம் உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஜே.பி.நட்டா கூறினார்.

குடும்பக் கட்டுப்பாடு மற்றும் மக்கள்தொகை கட்டுப்பாடு குறித்த புதிய தகவல் தொகுப்பை அமைச்சர் நட்டா வெளியிட்டார். சுகாதார அமைச்சகத்தின் முன்களப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதாக அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT