இந்தியா

மதுபான கொள்கை முறைகேடு: சிசோடியா வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு செய்தது தொடர்பாக ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய புலனாய்வு அமைப்புகள் வழக்கு பதிவுசெய்துள்ளன.

இந்த வழக்குகளில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் கரோல் மற்றும்சஞ்சய் குமார் அமர்வு விசாரிக்கஇருந்தது. இந்த நிலையில், நீதிபதிசஞ்சய் குமார் விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நீதிபதி சஞ்சீவ்கண்ணா கூறுகையில், “எங்கள்சகோதரருக்கு சில சிரமங்கள் உள்ளன. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஜாமீன் மனு மீதானவிசாரணையில் அவர் பங்கேற்கவில்லை” என்றார்.

சிசோடியா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “இந்த வழக்கை அவசரவழக்காக பட்டியலிடுமாறு கோரியதுடன் நேரம் மிக முக்கியமானது. இரண்டு வழக்குகளிலும் விசாரணை தொடங்கவில்லை” என நீதிபதி அமர்விடம் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை மற்றொரு அமர்வு ஜூலை 15-ம் தேதிவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT