இந்தியா

டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏ உட்பட பலர் பாஜகவில் இணைந்தனர்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா நேற்று கூறியதாவது: டெல்லி பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆம் ஆத்மி கட்சியின் சதார்பூர் தொகுதி எம்எல்ஏ கர்த்தார் சிங் தன்வார், டெல்லி முன்னாள் அமைச்சர் (படேல் நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ) ராஜ் குமார் ஆனந்த் மற்றும் படேல் நகர் தொகுதியின் மற்றொரு முன்னாள் எம்எல்ஏ வீனா ஆனந்த் ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

இவர்களுடன் தெற்கு டெல்லியின் சையது-உல்-அஜைப் வார்டு கவுன்சிலர் உமத் சிங் போகட், நிர்வாகிகள் பலரும் பாஜகவில் இணைந்தனர். பிரதமர் மோடியின்செயல்பாடு மற்றும் அவருடைய தலைமை பண்பால் ஈர்க்கப்பட்டதால் அவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். கட்சியில் சேர்ந்த அனைவரையும் வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT