இந்தியா

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் குறைப்பு: மேட்டூர் அணை நிரம்புவதில் தாமதம்

இரா.வினோத்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை ஓய்ந்ததன் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி ஆகிய‌ அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் உபரி நீர் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் குடகு, தலைக்காவிரி, மடிகேரி, ஷிமோகா, சிக்மகளூர், மங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை கொட்டித்தீர்த்தது.

அரபிக் கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர கர்நாடகத்திலும், கேரளாவின் வயநாடு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் கர்நாடகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்தன.

மேட்டூர் நீர் மட்டம் அதிகரிப்பு

எனவே காவிரி ஆற்றில் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு வந்து கொண்டிருந்த நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டது. அதிகபட்சமாக கடந்த வாரம் காவிரியில் வினாடிக்கு 90 ஆயிரம் கன அடி நீர் வரை திறக்கப் பட்டது. இதனால் மேட்டூர் அணை யின் நீர்மட்டம் மிக வேகமாக அதிகரித்தது.

நீர்வெளியேற்றம் குறைப்பு

இந்நிலையில் கடந்த 3 தினங்களாக க‌ர்நாடக மாநிலத்தில் குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த தென்மேற்கு பருவ மழை ஓய்ந்தது. இதனால் கிருஷ்ண ராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு வந்து கொண்டி ருந்த நீரின் அளவு கணிசமாக குறைந்தது. எனவே அந்த அணை களில் இருந்து வெளியேறும் உபரி நீரின் அளவை கர்நாடக நீர்ப் பாசனத்துறை வெகுவாக குறைத் துள்ளது.

ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து வெளியே றும் உபரி நீரின் அளவை பாதியாக குறைத்து, வினாடிக்கு 2,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

SCROLL FOR NEXT