ஆந்திர மாநிலத்தில் தனது சொந்த தொகுதியான குப்பம் பகுதியில், பொதுமக்களை நேற்று சந்தித்து குறைகளை கேட்டறிந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு. படம்: பிடிஐ 
இந்தியா

என்னுடைய நிகழ்ச்சிகளுக்கு ஆட்கள் சேர்க்காதீர்கள்: அதிகாரிகளுக்கு சந்திரபாபு உத்தரவு

செய்திப்பிரிவு

குப்பம்: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்த தொகுதியான குப்பம் தொகுதிக்கு வந்த ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு, செவ்வாய்க்கிழமை குப்பம் பஸ் நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். 2-ம் நாளான நேற்றுகாலை தனது குப்பம் தொகுதி மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இதனை தொடர்ந்து, குப்பம் அரசு கல்லூரியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஆர்ப்பாட்டமில்லாத அரசுஅதே வேளையில் மக்களுக்குநன்மை செய்யும் அரசு என்பதேஎனது குறிக்கோள். ஆந்திரமாநிலம் முற்றிலும் ஏழ்மைஇல்லாத மாநிலமாக உருவெடுக்க வேண்டும்.

இதற்கான செயல்முறை திட் டத்தை எனக்கு மிக விரைவில் வழங்கிடுங்கள். குப்பத்தில் ரவுடிக்கள் இருக்க கூடாது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை நடக்க கூடாது.

நான் பங்கேற்கும் கூட்டங் களுக்கு அரசு பேருந்து, பள்ளி, கல்லூரி பேருந்துகள் மூலம் வலுக்கட்டாயமாக ஆட்களை சேர்க்க வேண்டாம். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

SCROLL FOR NEXT