இந்தியா

இந்தியாவில் 6 மாதங்களில் 12.7 லட்சம் சைபர் குற்றங்கள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டிஜிட்​டல் அரெஸ்ட், ஆன்​லைன் வங்கி மோசடி, ஹேக்கிங், சமூக வலைதள மோசடிகள், ஆன்​லைன் நிதி மோசடிகள், வைரஸ் தாக்​குதல் உட்பட பல்​வேறு வகை​யான சைபர் குற்​றங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன.

கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரையி​லான 6 மாத காலத்​தில் நாடு முழு​வதும் சைபர் குற்​றங்​கள் தொடர்​பாக 12.71 லட்​சம் புகார்​கள் பதிவு செய்​யப்​பட்டு உள்​ளன. இதில் 2.86 லட்​சம் புகார்​கள் ஆன்​லைன் வங்கி பணப்​பரி​மாற்ற மோசடி தொடர்​பானவை.

ஒட்​டுமொத்​த​மாக ரூ.10,178 கோடி மோசடி செய்​யப்​பட்டு உள்​ளது. தமிழகத்​தில் நடை​பெற்ற 63,116 சைபர் குற்​றங்​கள் மூலம் ரூ.897.79 கோடி அளவுக்கு மோசடி செய்​யப்​பட்​டு உள்​ளது.

SCROLL FOR NEXT