இந்தியா

தேர்தல் கருத்து கணிப்பால் நிறுவனத்துக்கு இழப்பு: ஆக்சிஸ் மை இண்டியா தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் பல்வேறுமுன்னணி ஊடகங்கள் ஜூன் 1-ம்தேதி இரவு கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. ஆனால் கருத்து கணிப்புகளுக்கு மாறாகவே தேர்தல் முடிவுகள் வந்தன.

இந்த சூழலில் முன்னணி கருத்துக் கணிப்பு நிறுவனமான ஆக்சிஸ் மை இண்டியாவின் தலைவர் பிரதீப் குப்தா, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தேர்தல் கருத்துக் கணிப்புகளை நடத்துவதால் எங்களுக்கு எவ்வித லாபமும் இல்லை. கருத்துக் கணிப்புகளை நடத்துவதற்கான செலவுகளை ஊடகங்கள் முழுமையாக வழங்குவது கிடையாது.

கருத்துக் கணிப்பை நடத்தும்ஊழியருக்கு ஒரு நாளைக்கு தலாரூ.500 மற்றும் படிகளை வழங்குகிறோம். நாடு முழுவதும் கருத்துக் கணிப்புகளை நடத்துவதற்காக பெருந்தொகையை செலவிடுகிறோம். இதனால் எங்களுக்கு பொருளாதார இழப்பே ஏற்படுகிறது. எனினும் தேர்தல் கருத்துக் கணிப்புகள் மூலம் எங்களுக்கு விளம்பரம் கிடைக்கும். அதன்மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளுக்காக எங்களை அணுகுவார்கள்.

மக்களவைத் தேர்தலில் 5.82லட்சம் பேரின் கருத்துகளைநாங்கள் கேட்டறிந்தோம். இதன்அடிப்படையிலேயே கருத்துக் கணிப்புகளை வெளியிட்டோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT