இந்தியா

ரோஜா மீது சிபிஐ விசாரணை கோரி புகார்

செய்திப்பிரிவு

விஜயவாடா: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏவாகவும், கடைசி இரண்டரை ஆண்டுகள் சுற்றுலா, விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு துறைகளின் அமைச்சராகவும் பணியாற்றியவர் ரோஜா.

இவர் 3-வது முறையாக நகரி தொகுதியில் போட்டியிட்டு இம்முறை படுதோல்வி அடைந்துள்ளார். ஜெகன் அரசு இருந்தபோது, ‘ஆடுதாம் ஆந்திரா’ எனும் நிகழ்ச்சி ஆந்திரா முழுவதும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி தோல்வி அடைந்தது. இதற்காக ஜெகன் அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவித்தது.

இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும் நேற்று ஆத்யா-பாத்யா அமைப்பினர் விஜயவாடா சிஐடி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

SCROLL FOR NEXT