இந்தியா

‘‘கர்நாடக மக்கள் பிரதமர் மோடியை நிராகரிப்பார்கள்’’ - ராகுல் காந்தி

செய்திப்பிரிவு

கர்நாடாக மக்கள் பிரதமர் மோடியையும், பாஜக ஆட்சியையும் நிராகரிப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்

கர்நாடகாவில் வரும் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கர்நாடகவில் முகாமிட்டுள்ளனர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு நடந்த  தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு  பேசியதாவது:

"பிரதமர் நரேந்திரமோடி அம்பேத்கரின் பெருமைகளை பேசி வருகிறார். ஆனால் அதே வேளையில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினர் தாக்கப்படும்போது மவுனம் காக்கிறார். கர்நாடாக மக்கள் பிரதமர் மோடியும், பாஜகவினரையும் நிராகரிப்பார்கள்.

மத்திய அமைச்சர்கள் பலரும், அரசியல் சட்டத்தையே மாற்றப்போவதாக கூறுகிறார்கள். இதற்கு  நாங்கள் அனுமதிக்க மாட்டோம்”

இவ்வாறு ராகுல் பேசினார்.

SCROLL FOR NEXT