லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஹப்பூர் மாவட்டம், பில்குவா என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடி உள்ளது. இந்நிலையில் புல்டோசர் ஓட்டிவந்த ஒருவர் சுங்கச் சாவடியை கடந்துசெல்ல முயன்றபோது, சுங்கக் கட்டணத்தை செலுத்துமாறு அங்கிருந்த ஊழியர்கள் கூறி யுள்ளனர்.
மேலும் அந்த வாகனத்தை அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த டிரைவர், தனது புல்டோசர் மூலம்கட்டணம் வசூலிக்கும் 2 பூத்களை உடைத்து நொறுக்கினார். பிறகு அவர் தப்பிச்செல்லும் வழியில் மேலும் சில வாகனங்களை சேதப்படுத்தினார். மதுபோதை யில் அவர் சுங்கச் சாவடியை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து டிரைவரை போலீ ஸார் கைது செய்துள்ளனர்.