கோப்புப் படம் 
இந்தியா

என்டிஏ.வுக்கு 340, இண்டியாவுக்கு 200 இடம்: டெல்லியில் சூதாட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 2 வாரங்களுக்கு முன்பே மக்களவை தேர்தல் முடிவுகள் தொடர்பான சூதாட்ட சந்தை தொடங்கிவிட்டது.

குறிப்பாக, டெல்லியில் உள்ளசூதாட்டக்காரர்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 341 முதல் 343 இடங்கள் கிடைக்கும் என்றும் இண்டியா கூட்டணிக்கு 198 முதல் 200 இடங்கள் கிடைக்கும் என்றும் கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக தனியாக 310 முதல் 313இடங்களிலும் காங்கிரஸ் தனியாக 57 முதல் 59 இடங்களிலும் வெற்றி பெறும் என சூதாட்டக்காரர்கள் கணித்துள்ளனர். இதுபோல டெல்லியில் உள்ள 7 இடங்களில் 6-ல் பாஜகவும் 1-ல் இண்டியா கூட்டணியும் வெல்லும் என அவர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

SCROLL FOR NEXT