இந்தியா

டெல்லி மதுபான கொள்கை ஊழல்: கவிதாவுக்கு ஜூன் 7 வரை நீதிமன்ற காவல்

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: டெல்லி மதுபான கொள்கை ஊழல்வழக்கில் ரூ. 100 கோடி வரைதெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின்மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா முறைகேடு செய்துள்ளார் என அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளன. அதன்பேரில் கவிதா கைது செய்யப்பட்டு, தற்போது டெல்லி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று அவர்டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். கவிதாவுக்கு சிபிஐ வழக்கில் ஜூன் 7-ம் தேதி வரையும், அமலாக்கத்துறை வழக்கில் ஜூலை 3-ம் தேதி வரையும் நீதிமன்ற காவலை நீட்டிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. 6-ம் தேதி கவிதா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது. இதற்கு முன் குற்றப்பத்திரிகையின் துணை நகலை நேற்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில் ரூ.1,100 கோடி வரை டெல்லி மதுபான விவகாரத்தில் விற்பனை நடந்துள்ளது.

அதன் மூலம் ரூ. 192 கோடி லாபத்தை இண்டோ ஸ்பிரிட்ஸ் நிறுவனம் அடைந்தது. இதில் ரூ. 100 கோடி ஆம் ஆத்மி கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான டிஜிட்டல் ஆதாரங்களை கவிதா அழிக்க முயன்றுள்ளார் என அமலாக்கத்துறை நேற்று டெல்லி நீதிமன்றதில் தெரிவித்தது.

மேலும், விசாரணையின் போது கவிதாவின் வாக்குமூலங்களும் குற்றப்பத்திரிகையுடன் சமர்ப் பிக்கப்பட உள்ளது. இதில் பல உண்மைகள் மற்றும் திரைக்கு பின் இருந்து இந்த மோசடியை நடத்திய உண்மையான முகங்கள் குறித்து தெரியவரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT