இந்தியா

ஆட்டோ மீது ரயில் மோதல்: 20 பேர் பலி

செய்திப்பிரிவு

பிஹார் மாநிலம், கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற ஆட்டோ மீது ரயில் மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர். இதில் 8 பேர் குழந்தைகள் ஆவர்.

பிஹார் மாநிலம், கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் சீம்ரா, சுகாலி ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த இரு ரயில் நிலை யங்களுக்கு நடுவில் சின்னாட்டா என்ற கிராமத்தில் ஆளில்லா ரயில்வே கிராசிங் உள்ளது.

இந்த ரயில்வே கிராசிங்கை திங்கள்கிழமை ஒரு ஆட்டோ கடந்து செல்ல முயன்றது. அதில் குழந்தைகள் உட்பட சுமார் 20 பேர் இருந்தனர். அப்போது வேகமாக வந்த ரப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரயில், ஆட்டோ மீது மோதி சுமார் அரை கி.மீ. தூரத்துக்கு இழுத்துச் சென்றது.

இதில் 8 குழந்தைகள் உட்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் அவர் களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அக்கம்பக்கத்து கிராம மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து போலீஸாரும் ரயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த அனைவரும் ஒரே குடும் பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அவர்கள் சிக்நாதா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள் வதற்காக பெரிய ஆட்டோவில் சென்றுள்ளனர்.

சம்ஸ்திபூர் பிராந்திய ரயில்வே மேலாளர் (டிஆர்எம்) சம்பவ இடத் துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை விரைவுபடுத்தியுள் ளார். விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் ரயில் சேவை கள் பாதிக்கப்பட்டுள்ளன.

முதல்வர் இரங்கல்

இதுகுறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

பொதுமக்கள் போராட்டம்

விபத்து குறித்து தகவல் அறிந் ததும் உயிரிழந்தவர்களின் உற வினர்கள் சம்பவ பகுதியில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT