இந்தியா

பிரபல பள்ளியில் ராகிங்: அமைச்சர் மகன் தற்கொலை முயற்சி

செய்திப்பிரிவு

பள்ளியில் தனக்கு நேர்ந்த ராகிங் கொடுமையைத் தொடர்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் பிஹார் அமைச்சரின் மகன். இதனால் சுயநினைவு இழந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ளது ஸ்கிந்தியா ஸ்கூல் எனும் பிரபல பள்ளி. இதில் 9ம் வகுப்புப் படித்து வந்தார் ஆதர்ஷ் குமார். இவர் பிஹார் மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் ஜெய் குமார் சிங்கின் மகன் ஆவார்.

ஆகஸ்ட் 20ம் தேத் பள்ளி விடுதியில் கழுத்தில் சுற்றிய துணி யுட‌ன் மர்மமான முறையில் ஆதர்ஷ் குமார் தரையில் விழுந்து கிடந்தார். இதனை அறிந்ததும் அவரை தனியார் மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆதர்ஷ் குமாரின் இந்த நிலைக்கு அவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதே காரணம் என்று தெரியவந்துள்ளது. மேலும், பள்ளியில் சீனியர் மாணவர்கள் கொடுத்த ராகிங் தொல்லையால்தான் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ள குவாலி யர் மாவட்ட ஆட்சியர் பி.நர்ஹரி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே பிஹார் முதல் வர் ஜிதன் ராம் மஞ்சி இதைப் பற்றி மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகாணிடம் உரையாடியிருக்கிறார். குற்ற வாளிகளைக் கண்டுபிடித்து தண்டிக்கவும் அழுத்தம் கொடுத் துள்ளதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT