இந்தியா

அரசு நிறுவனங்கள், வங்கிகள் செய்திகள் அனுப்ப புதிய எண்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அழைப்பு விடுக்கவும், செய்திகள் அனுப்பவும் 160 என்ற தொடர் எண்ணை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளதாக மத்திய தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) தெரிவித்துள்ளது.

மேலும், அழைப்புகள் மூலம் ஒரு முறை கடவுச் சொற்களை வழங்குவதற்கும், மார்க்கெட்டிங் அழைப்புகளை வேறுபடுத்திக் காட்டுவதற்கும் இந்த புதிய 160 என்ற தொடர் எண்ணை அறிமுகம் செய்துள்ளதாக டிஓடி தெரிவித்துள்ளது. அதேநேரம், டெலி மார்க்கெடிங் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 140 தொடர் எண்ணிலிருந்து மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர அழைப்புகள் தொடர்ந்து பெறலாம்.

மேலும், அரசு நிறுவனம் மற்றும் கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து சேவை மற்றும் பரிவர்த்தனைக் கான அழைப்புகளை 10 இலக்கஎண்களில் இருந்தே மேற்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

160 தொடரில் இருந்து ஒருஎண்ணை வழங்குவதற்கு முன்பாக ஒவ்வொரு நிறுவனத்தையும் சரிபார்ப்பது தொலைக்தொடர்பு சேவை வழங்குநர் (டிஎஸ்பி) ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.

டிராய் சட்டம் 1977-ன்கீழ் அறிவிக்கப்பட்ட டிசிசிசிபிஆர்2018-ன் படி 160 தொடர்களில் இருந்து ஒதுக்கப்பட்ட எண்ணை பிரத்யேகமாக சேவை மற்றும்பரிவர்த்தனை குரல் அழைப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த டிஎஸ்பி-யிடமிருந்து உறுதி மொழியைப் பெற வேண்டும்என டிஓடி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT