இந்தியா

2 மாத விசா தஸ்லிமா வருத்தம்

செய்திப்பிரிவு

அடிப்படைவாதிகளின் எச்சரிக்கையால் 1994-ல் வங்கதேசத்தில் இருந்து வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா வெளியேறினார். அதன்பின்னர் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா என கடந்த 20 ஆண்டுகளாக அவர் வெளி நாடுகளில் சுற்றித் திரிகிறார்.

தற்போது டெல்லியில் வசித்து வரும் அவருக்கு விசா காலம் முடிவதால் அதனை மேலும் ஓராண்டுக்கு புதுப்பிக்க அவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு 2 மாதத்துக்கான சுற்றுலா விசாவை மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில், இந்த முடிவை நான் கற்பனையில்கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT