இந்தியா

ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் கூடாது: மக்களவையில் டி.ஆர்.எஸ். கடும் அமளி

செய்திப்பிரிவு

மக்களவையில், கேள்விநேரத்தின் போது தெலுங்கான உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டதால், அவையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

மக்களவையில் இன்று கேள்விநேரத்தின் போது, ஹைதராபாத் சட்டம் ஒழுங்கு தொடர்பாக, ஆளுநருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரம் குறித்து மக்களவையில் டி.ஆர்.எஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தால் அங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்றும், இது குறித்து விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் கோரினர்.

இதனை ஏற்க மறுத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இந்த பிரச்சினை குறித்து பூஜ்ஜிய நேரத்தில் உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றார்.

ஆனால், இதனை ஏற்க தெலங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர்கள், அரசியலமைப்பின் விதிகளில் சமரசம் செய்வதா? என்று கோஷமிட்டு அவையின் நடுவே சென்று அவர்கள் அமளியில் ஈடுப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மக்களவை பத்து நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT