பிரதமர் மோடியின் தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் வரும் ஜூன் 1-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், அமித் ஷா, ஜேபி நட்டா உட்பட முக்கிய தலைவர்கள் வாராணசியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, உத்தர பிரதேச தொழில் துறையினரை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்துப் பேசி வருகிறார். இந்நிலையில், இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீது மக்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை. 2019-ம்ஆண்டு இருந்ததைவிடவும் இப்போது பாஜகவுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.
இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைத் தாண்டும். உத்தர பிரதேசத்தைப் பொறுத்தவரையில் 2019 ஆண்டு பெற்ற இடங்களைவிடவும் கூடுதல் இடங்களில் பாஜக வெல்லும்” என்று தெரிவித்தார்.