இந்தியா

அமர்நாத் யாத்திரை நிறைவு: 3.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்

செய்திப்பிரிவு

இமயமலையில் உள்ள குகைக் கோயிலில் பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கான யாத்திரை ஞாயிற்றுக்கிழமை முடிவடைந் தது. 44 நாட்கள் நடைபெற்ற இந்த யாத்திரையில் 3 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

கடந்த ஜூன் 28-ம் தேதி இந்த யாத்திரை தொடங்கியது. மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற யாத்திரையில் 3 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற் பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்துள்ளதாக ஸ்ரீ அமர் நாத் கோயில் நிர்வாகம் தெரிவித் துள்ளது. மாரடைப்பு உள்ளிட்ட உடல் நலக் குறைவு காரணமாக யாத்திரையில் பங்கேற்ற 46 பேர் உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீநகரிலிருந்து சாதுக்கள் எடுத்து வந்த சுவாமியின் ‘சாரி முபாரக்’ என்ற தண்டாயுதத்துக்கு குகைக்கோயிலில் ஞாயிற்றுக் கிழமை காலை பூஜை செய்யப் பட்டது. யாத்திரையை நிறைவு செய்யும் நாளில் இந்த பூஜை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோரா கலந்து கொண்டார்.

SCROLL FOR NEXT