இந்தியா

கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் உயிரோடு இருக்கிறார்: அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமார் உயிருடன் இருப்பதா கவும் அவரை மீட்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி திங்கள் கிழமை எழுப்பிய கேள்விக்கு பதில ளித்த அவர் இந்த தகவலை வெளியிட்டார். ஆப்கானிஸ்தானில் சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்த தமிழகத்தை சேர்ந்த பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமார் கடந்த ஜூன் 2-ல் கடத்தப்பட்டார். இருமாதங் கள் ஆகியும் இவர் இன்னமும் மீட்கப்படவில்லை.

இதுகுறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி திங்கள்கிழமை கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது: ‘இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். பாதிரியார் உயிருடன் இருக்கிறார். அவரை மீட்க அனைத்து நடவடிக்கைக ளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்’ எனத் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்கள் குறித்து மாநிலங்களவையில் கனிமொழி தொடர்ந்து பேசியதாவது:

’வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அவர்களின் பாஸ்போர்ட்டுகள் பறித்து வைத்துக் கொள்ளப்படுகின்றன. மிகச் சிறிய அறையில் எட்டு முதல் பத்து பேர் வரை அடைக்கப்படுகிறார்கள். சுகாதாரமற்ற உணவு வழங்கப் படுகிறது. மனித உரிமைகள் மீறப்படுகின்றன’ என சுட்டிக்காட்டினார்.

SCROLL FOR NEXT