இந்தியா

ஓட்டு போடாதது ஏன்? - எம்.பி. ஜெயந்த் சின்ஹாவுக்கு பாஜக நோட்டீஸ்

செய்திப்பிரிவு

முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா. 2014, 2019 மக்களவை தேர்தல்களில் பாஜக சார்பாக ஹசாரிபாக் தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் இடம் பிடித்தார்.

இதனிடையே, தீவிர அரசியலில் இனி தான் பங்கேற்கப்போவதில்லை என்று கடந்த மார்ச் மாதம் ஜெயந்த்சின்ஹா அறிவித்தார். இதையடுத்து அந்த தொகுதியில் மணீஷ் ஜெய்ஸ்வால் என்பவரை வேட்பாளராக பாஜக முன்னிறுத்தியது.

இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 20) நடந்த ஐந்தாம் கட்ட தேர்தலில் ஜெயந்த் சின்ஹா வாக்கு செலுத்தவில்லை. கட்சி பணியில் ஆர்வம் செலுத்தாதது, வாக்களிக்காமல் இருந்தது ஏன் என விளக்கம் அளிக்கும்படி ஜெயந்த் சின்ஹாவுக்கு பாஜக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

SCROLL FOR NEXT