இந்த மக்களவைத் தேர்தல் வேறெப்போதும் இல்லாத வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி.பரதன், தேர்தலுக்குப் பிறகு அமையவுள்ள அரசில் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த தேர்தல் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது?
எங்கள் கட்சிக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே மிகவும் முக்கி யத்துவம் வாய்ந்த தேர்தல் இது. இந்திய அரசியலை தீர்மானிக் கப்போகும் தேர்தல் இது. இப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சியாக உள்ளது. தேர்தலுக்கு பிறகும் இதே நிலை தொடரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
மூன்றாவது அணிக்கு இந்திய அரசியலில் இடம் உள்ளதா?
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் 100-க்கும் குறைந்த இடங்களில்தான் வெற்றி பெற முடியும். பாஜகவிற்கு 170 இடங் களுக்கு மேல் கிடைக்காது. அரசை அமைப்பதற்கு இந்த இரு அரசியல் கட்சிகளாலும் முடியாத நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கட்சி களின் பங்களிப்பு மிகவும் முக்கிய மாக இருக்கும்.
அது என்ன மாற்றுக் கொள்கை?
இப்போதுள்ள புதிய தாராளமயக் கொள்கையை கைவிட்டு, மக்கள் நலன் சார்ந்த கொள்கையை வகுப்பதே மாற்றுக் கொள்கை. இப்போதைய கொள்கையால் விலைவாசி உயர்வு, ஊழல், பொருளாதார தேக்கநிலை ஆகியவை ஏற்பட்டுள்ளன. மாற்றுக் கொள்கையை அமல் படுத்துவதன் மூலம் ஊழலை தடுக்க முடியும்.
மேற்கு வங்கத்தில் இடதுசாரி கள் செல்வாக்கை இழந்து விட்டனவா?
எங்களுக்கான வாய்ப்புகள் இப்போது மிகவும் பிரகாசமாக உள்ளன. திரிணமூல் காங் கிரஸ் ஆட்சியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெற வில்லை. சட்டம், ஒழுங்குநிலை மோசமாக உள்ளது. முதல்வராக பெண் இருக்கும் மாநிலத் தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.