லாலு | கோப்புப் படம் 
இந்தியா

சமூக வலைதளம் மூலம் பாஜகவை விமர்சிக்கும் லாலு!

செய்திப்பிரிவு

ஒரு காலத்தில் ஐடி துறையை கிண்டலாக பேசிய பிஹார் முன்னாள் முதல்வர் லாலு தற்போது, தனது அரசியல் செயல்பாட்டுக்கு சமூக வலைதளத்தையே பிரதானமாக சார்ந்து உள்ளார்.

உடல்நலம் காரணமாக லாலு முன்பு போல் வெளியே செல்வதில்லை. அவருடைய மகள் ரோஹிணி ஆச்சார்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க மட்டுமே அவர் வீட்டை விட்டு வெளியே செல்கிறார். மற்றபடி, அவரது அரசியல் செயல்பாடுகள் எல்லாம் சமூக வலைதளம் மூலமாகத்தான் நிகழ்கின்றன. பாஜகவையும் பிரதமர் மோடியையும் விமர்சித்து லாலு இடும் பதிவுகள் வைரலாக பரவி அதிர்வலையை ஏற்படுத்துகின்றன.

சில தினங்களுக்கு முன்பு லாலு எக்ஸ் பக்கத்தில், “பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் நாட்டுக்கு 4 விஷயங்களை மட்டும் தான் கொடுத்துள்ளார். வேலையின்மை, பண வீக்கம், ஏழ்மை, பொய்யான வாக்குறுதிகள்” என்று பதிவிட்டார். இந்தப் பதிவு வைரலானது.

அரசமைப்புச் சட்டத்தை பாஜக மாற்றப் போவதாக சமீபத்தில் லாலு பதிவிட்டார். அது தேசிய அளவில் கவனம் ஈர்த்த நிலையில், அந்தப் பதிவுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு பிரதமர் மோடி தள்ளப்பட்டார்.

SCROLL FOR NEXT