உத்தரபிரதேசத்தில் அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நம்பிக்கை தெரிவித்தார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று அமேதியில் செய்தியாளர்களிம் கூறும்போது, “நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். அமேதி மற்றும் ரேபரேலியில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
எங்கு சென்றாலும் மக்களின் மனநிலை இண்டியா கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளது. பாஜக 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என ராகுல் காந்தி கூறுவது பற்றி கேட்கிறீர்கள். ராகுல் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் மக்களின் நாடித்துடிப்பை அறிந்துள்ளார். எனவே அவர் தனது கணிப்பை கூறுகிறார்” என்றார்.