இந்தியா

புகையிலை பொருட்களுக்கு தடை கர்நாடக அரசு முடிவு

செய்திப்பிரிவு

அனைத்து வகையான‌ புகையிலை பொருட்களுக்கும் தடைவிதிக்க யோசித்து வருவதாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் யு.டி.காதர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கர்நாடக சுகா தாரத்துறை அமைச்சர் யு.டி.காதர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகத்தில் சில மாதங்களுக்கு முன்பு குட்காவுக்கு தடை விதிக்கப்பட்டது. படிப்படியாக அனைத்து வகையான புகையிலை பொருட்களுக்கும் தடை விதிப்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம்.

உணவுப் பாதுகாப்பு தர ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி உணவு பொருட்களில் புகை யிலையை கலப்பதை தடுக்க வும்,தொடர்ந்து கண்காணிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.பொது மக்களுக்குப் பாதுகாப்பான உணவுப் பொருள்களை வழங்கும் நோக்கத்தில் அனைத்து வகையான புகையிலை பொருட்களுக்கும் தடை விதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட, நறுமணமூட்டிய புகையிலை பொருட்களை கண்காணித்து கர்நாடகத்தில் தடை விதிக்க ஆலோசித்து வருகிறோம், என அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT