இந்தியா

நடிகை நவ்நீத் கவுர் மீது வழக்கு பதிவு

செய்திப்பிரிவு

நடிகையும், எம்பியுமான நவ்நீத் கவுர் மீது ஹைதராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் அமராவதி தொகுதியின் பாஜக எம்பியான நடிகை நவ்நீத் கவுர், ஹைதராபாத் ஷாத் நகரில் சில நாட்களுக்கு முன்னர் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸுக்கு வாக்களித்தால் அது பாகிஸ்தானுக்கு வாக்களித்தது போலாகும் என கூறினார். இது குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ஷாத் நகர் போலீஸ் நிலையத்தில் நடிகை நவ்நீத் கவுர் மீது புகார் அளித்தனர்.

காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்துவதுபோல் அவர் பேசியிருக்கிறார் என்று புகாரில் கூறி உள்ளனர். இது தொடர்பாக ஷாத் நகர் போலீஸார் நடிகை நவ்நீத் கவுர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்

          
SCROLL FOR NEXT