இந்தியா

தோல்வி பயத்தால் அதானி - அம்பானியிடம் உதவி கோருகிறார்: பிரதமருக்கு ராகுல் பதிலடி

செய்திப்பிரிவு

ராகுல் நேற்று அளித்த பேட்டியில்கூறியதாவது: மக்களவை தேர்தலில் பாஜக ஜெயிப்பதற்கு தொழிலதிபர்கள் கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானியிடம் பிரதமர்மோடி உதவி கோரியுள்ளார்.

அதன் காரணமாகவே, ரகசிய ஒப்பந்தமாக அவர்களை காங்கிரஸுக்கு எதிராக பிரதமர் பயன்படுத்த தொடங்கியுள்ளார். 10 ஆண்டுகளில் அதானி மற்றும் அம்பானியின் பெயர்களை பிரதமர் குறிப்பிடவில்லை. ஆயிரக்கணக்கான உரைகளை நிகழ்த்தியபோதிலும் அவர்களின் பெயரை எங்கும் உச்சரித்ததில்லை.

ஆனால், தற்போது இந்தியாகூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது என்பது தெரிந்த உடன் பிரதமர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அதானி, அம்பானியை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்களின் பெயர்களை அடிக்கடி பிரச்சாரத்தில் பயன்படு ஆதாயம் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT