புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் நடத்திய என்கவுன்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பாஇயக்கத்தைச் சேர்ந்த கமாண்டர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு காஷ்மீர் குல்காமில் உள்ள ரெட்வானி பயீன் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை இரவு தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது, தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ரெட்வானி பயீனில் வசித்துவந்தவர் பாசித் அகமது தார். இவர் லஷ்கர்-இ-தொய்பாஆப்ஷுட் குழுவான தி ரெசிடெண்ட் ப்ராண்ட் (டிஆர்எஃப்) தளபதியாகவும் செயல்பட்டு வந்தார். தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) மிகவும் தீவிரமாக தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரான இவர் புதன்கிழமை இரவு நடந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் சேர்த்து அந்த இயக்கத்தை சேர்ந்த மோமின் குல்சார் மற்றும் ஃபஹிம் அகமது பாபா ஆகியோரும் உயிரிழந்தனர்.