நாட்டிலேயே முதன்முதலாக மீன் மருத்துவமனையை தொடங்க மேற்குவங்க மாநில அரசு திட்ட மிட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு செயல்படத் தொடங்கும்.
இதுகுறித்து மேற்குவங்க விலங்குகள் மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகத்தின் மீன் நுண்ணுயிரியியல் நிபுணர் டி.ஜே. ஆப்ரகாம் புதன்கிழமை கூறியதாவது: மீன் உற்பத்தித் துறையில் சரியான நிர்வாக முறை களை கடைப்பிடிக்காத காரணத் தால் அவை பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றன. இதனால் 20 சதவீதத்துக்கும் அதிகமாக மீன் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
எனவே, மீன்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மீன் மருத்துவமனை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது நாட்டின் முதல் மீன் மருத்துவ மனையாக இருக்கும். முதல் கட்டமாக, பாதிக்கப்பட்ட மீன்களுக் காக 25 நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன.
இம்மருத்துவமனை செயல் பாட்டுக்கு வந்தால் மீன் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என்றார் ஆப்ரகாம்.